தொடக்கப்பள்ளி - உடைந்தமடை

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 
-உடைந்தமடை 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், முன்னுர்மங்கலம் ஊராட்சியால் தொடங்கப்பட்டது உட்பட்ட உடைந்தமடை கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியின் 20ஆம் ஆண்டு பள்ளி திறப்பு விழா சிறப்புடன் கொண்டுகிறோம் 

 உடைந்தமடை என்னும் கிராமத்திற்கு ஒரு குடிசையில் 2004ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது பிறகு மழைக் காலங்களில் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அப்போதைய துணை ஊர் தலைவர் சுப்ரமணியம் அவர்கள் அவர்கள் ஊராட்சி மன்றங்களிடம் பல மனுக்களை அளித்து 2005,ஜூன் 8ம் நாள் அன்று பள்ளிக்கூடம் திறந்து வைத்தார் 
அப்போது முதல் வகுப்பு அறை பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் பதினைந்து பேர் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தோம் 

மோகன்ராஜ், விக்னேஷ், சீனு, கவிதா, கலைச்செல்வி, கீர்த்தனா, விமலா, தேவி,அபிராமி, பச்சையப்பன், தமிழரசு, வெங்கடேஷ், வெங்கடேசன், ரஞ்சித், அச்சுதன் முதல் கட்டிட அறையின்  ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அவர்கள் 
 சக்திவேல், ராணி என்ன இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள்  
  பிறகு வேலு, முருகன், சந்துரு, பிரகாஷ், வினோத், நாகராஜ் சின்னதுரை, பிரகாஷ்,இன்னும் சிலர் பிறகு வகுப்பில் படித்தர்கள் 

 பள்ளிக்கூடம் ஆனது இரண்டு வகுப்பறை மற்றும் ஆசிரியரை மட்டுமே உருவாக்கப்பட்டது அப்போது பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கட்டிட சுவர்களும் எதுவும் இல்லாமல் இருந்தது 
 பிறகு தண்ணீர் தொட்டி தரையில் உருவாக்கப்பட்டிருந்தது பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்து 2006ம் ஆண்டு உயரத்தில் தண்ணீர் தொட்டி ஒன்று உருவாக்கப்பட்டது
 விளையாட்டு மைதானங்கள் கருத்தில் கொண்டு விளையாட்டு மைதானங்கள் மூன்று கட்டமாக உருவாக்கப்பட்டது.

 பிறகு சத்துணவு கூடம் அமைக்கப்பட்டது அதில் உமா என்பவர் சத்துணவு அம்மாவாக பணியாற்றி இருந்தார், பிறகு 2008 ஆம் ஆண்டு கழிவறைகளுக்கு உருவாக்கப்பட்டது பிறகு 2009 ஆம் ஆண்டு பள்ளிக்கர சுற்றுசூழல் அமைக்கப்பட்டது  பள்ளிக்கு தண்ணீர் ஊர் குழாய்களில் வரும் நீரை பயன்படுத்தி இருந்தார்கள்

   பள்ளிக்குப் பின்புறத்தில் ஒரு குட்டை ஒன்று அமைந்திருக்கும் ஒரு விலமரமும் பள்ளிக்கு முன் புறத்தில் புங்கமரங்கள் அதிகம் வளர்ந்திருக்கும் பள்ளியின் வடமேற்கு பகுதியில் விளையாடும் இரண்டு சீசா அமைக்கப்பட்டது அங்கிருக்கும் புங்க மரம் அப்போது வளர்ந்து இருந்ததால், சீசவில்  விளையாடும் போது, எங்களுக்கு பலபேருக்கு காயம் ஏற்படாது அதனால் சக்திவேல் ஆசிரியர் சீசாவை கழற்றி விட்டார்                   
 2010ம் ஆண்டு நாங்கள் ஐந்தாம் வகுப்பு முடிந்த பிறகு  எங்கள் உறவுகள் அங்கிருந்து பல வழிகளில் பிரிந்தது 
சில வருடங்களுக்கு பிறகு நினைத்து பார்க்கிறேன் 

                      2024 விண்வெளி படம் பள்ளியின் பகுதிகள் 


நினைவு கவிதைகள் 
  
     நான் முதலில் பயின்ற பள்ளி 
     நான் முதலில் பழகிய பள்ளி
     நான் ஓடி விளையாடிய      
     வகுப்பைறைகள் 
     
     என் நண்பர்களை 
     உருவாக்கிய பள்ளி 
     எனது பள்ளி 
     எனக்கே வாழ்ந்தேன் 

     நான் பழகியதற்கு 
     காரணம் தெரியவில்லை 
     நாங்கள் பிரிந்தற்கும் 
     காரணம் தெரியவில்லை 

    சிறு பிள்ளைகள் நாங்கள் 
    சற்றும் சேர்ந்தோம் 
    சிற்றும் விளையாடினோம் 

     நாங்கள் விதைத் விதைகள் 
     எங்கள் நினைவாக எங்களை 
     தாண்டி வளர்ந்தன 

     நினைவுகள் மட்டும் 
     மீண்டும் பெற முடியாத 
     காலம் 
     
     யார் நினைத்தாலும் 
    அங்கு சென்று மீண்டும்     
    வாழமுடியாத காலம் 
     
           த.சீனு ( எழுத்தாளர் )
           வேதியியல் பட்டாதரி 

    


       

    

Comments